தி.கோடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.7.17 லட்சம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அலுவலகத்திற்குள் நுழைந்த நிலையில், பத்திரப்பதிவு பணிக்காக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றி விட்டு, ஒவ்வொரு பிரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

அலுவலகத்தில் சார்பதிவாளர் இல்லாததால், தலைமை எழுத்தர் மாலதி பொறுப்பு சார்பதிவாளராக செயல்பட்டு வருகிறார். அவரிடமும், அலுவலக ஊழியர்களிடமும், பத்திர எழுத்தர்களிடமும் லஞ்ச ஒழிப்புத்தறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன் தினம் இரவிலும் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்தது. நேற்று காலை விசாரணை முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத ரூ.7.17 லட்சம் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சோதனை தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை பொறுப்பு சார்பதிவாளர் மாலதி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்