ஊராட்சி நிதியில் முறைகேடு? அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெரம்பலூர் ஆட்சியரிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் புகார்

By செய்திப்பிரிவு

ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி நிதியை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக பல்வேறு பணிகளுக்காக சிலருக்கு அரசு அதிகாரிகள் ஒதுக்கீடு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நேற்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவித்திருந்ததாவது; ஒன்றியக் குழு ஒப்புதல் இல்லாமல் செய்யாத வேலைக்கு 15-வது மத்திய நிதியில் இருந்து ரூ.32 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியக்குழு தலைவர், உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக ரூ.1.56 கோடிக்கு பணிகள் தேர்வு செய்துள்ளனர். நூறுநாள் வேலை திட்டம், பசுமை வீடுகள் திட்டம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வதிலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை புறக்கணிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்