ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு அணைக்கட்டுக்கு 42 ஆயிரம் கனஅடி நீர்வரத்து ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்ட உபரிநீர்

By செய்திப்பிரிவு

பொன்னையாற்றில் இருந்து அதிகப்படியான நீர்வரத்து பாலாற்றுக்கு வருவதால், வாலாஜா அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை நில வரப்படி அரக்கோணத்தில் 56.20 மி.மீ, ஆற்காட்டில் 114, காவேரிப் பாக்கம் 85.20, சோளிங்கரில் 23.3, வாலா ஜாவில் 96.10, அம்மூரில் 88.60, கலவையில் 56.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

பொன்னையில் நீர்வரத்து

‘நிவர்’ புயலால் ஏற்பட்ட கனமழையால் நேற்று முன்தினம் பொன்னையாற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆந்திர மாநிலத்தில் கலவகுண்டா ஏரியில் இருந்து உபரி நீர் பொன்னையாற்றில் வெளியேற்றியதால் அதிகப்படி யான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொன்னையாற்றில் 20 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து பாலாற்றில் கலந்தது. ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பாலாறு அணைக்கட்டில் நீர்வரத்து 42,600 கன அடியாக இருந்தது.

கால்வாயில் தண்ணீர் திறப்பு

கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் பெய்த கன மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘நிவர்’ புயலால் ஏற்பட்டுள்ள நீர்வரத்து கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகளவில் இருந்தது.

பாலாறு அணைக்கட்டு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி கொள்ளளவு கொண்டது. ஆணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அணையின் மதகுகள் வழி யாக காவேரிப்பாக்கம், மகேந்திர வாடி ஏரிகளுக்கும் தூசி, சக்கர மல்லூர் கால்வாய் வழியாக 4,500 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டது. கால்வாய் வழி யாக வெள்ளநீர் திருப்பி விடப் பட்டதை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று பார்வையிட்டார்.

பாலாறு அணைக்கட்டு பகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 125 நிவாரண முகாம்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மழையால் யாரும் உயிரிழக்க வில்லை. மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் விவசாயி களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 512 ஏக்கர் நெல், 62 ஏக்கர் நிலக்கடலை,13 ஏக்கர் உளுந்து உள்ளிட்ட பயிர்கள் கனமழையால் சேதமடைந்துள்ளன. மேலும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

அப்போது, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முகமது ஜான், காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொன்னை, பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுப் பகுதியில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, செல்பி போட்டோ எடுக்க செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர். அரப்பாக்கம், திருவலம்பாலாறு தரைப்பாலம் மூழ்க வாய்ப் புள்ளதால் சாலை வழி போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்