விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை யால் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
'நிவர்' புயல் தாக்கத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மின்சாரம் தடை செய்யப் பட்டது. நேற்று முற்பகலில் இருந்து மீண்டும் மின் விநியோகம் துவங்கியது. மாவட்டத்தில் கண்ட மங்கலம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட 10 இடங்களில் சாலை களில் மரங்கள் முறிந்து விழுந்தன. உடனடியாக, மீட்புக்குழுவினர் மரங்களை அகற்றினர்.
விழுப்புரம் தாமரைகுளம் பகுதி யில் சுமார் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம், புதிய பேருந்து நிலையம், சாலாமேடு உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் சூழ்ந்தது. இப்பகுதிகளில் அமைச்சர் சிவி.சண்முகம், ஆட்சியர் அண்ணா துரை உள்ளிட்ட அதிகாரிகள் நேரில்பார்வையிட்டு, தண்ணீரை வெளி யேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் வாணியம்பாளை யம், புருஷானூர், மழவராயனூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. விழுப்புரத்தை சுற்றி சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. புயலால் 500 ஏக்கர்வாழை, முருங்கை சேதமடைந் துள்ளது. உரிய இழப்பீடு வழங்கவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
வீடூர் அணையில், நேற்று முன் தினம் தொடங்கி நேற்று காலை வரைபெய்த மழையில் 5 அடி உயர்ந்து தற்போது 19 அடியாக நீர்மட்டம்உள்ளது. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வானூர் வட்டத்தில் மட்டும் 19 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி யுள்ளன. மாவட்டம் முழுவதும் 629 தூய்மைப்பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட் டுள்ளனர். இவர்களில் நாமக்கல், நெல்லை, மதுரையிலிருந்து சுமார் 250 பணியாளர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற் றைய மழை அளவு (மில்லிமீட்டரில்) விழுப்புரம் 279, வானூர் 137, திண்டிவனம்141,மரக்காணம் 130, செஞ்சி 154, வளத்தி 160, முகையூர் 153, திருவெண்ணைநல்லூர் 162, அவலூர்பேட்டை 92 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago