தி ஒழிப்பு போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி

பெரியாரின் உத்தரவை ஏற்று 1957, நவ.26-ம் தேதி தொடங்கிய, சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு நகல்களை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பட்டுக்கோட்டை ராமசாமியும், மணல்மேடு வெள்ளைச்சாமியும் 1958-ல் சிறையிலேயே உயிரிழந்தனர். இவர்களின் சமாதி திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் உள்ளது.

இந்நிலையில், போராட்டம் தொடங்கிய நாளை நினைவுகூரும் வகையில் நவ.26-ம் தேதியான நேற்று இவர்களின் சமாதியில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகரச் செயலாளர் வின்சென்ட், மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன், திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் புதியவன், திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் மணி, தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரமணா ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்