உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறு சுழற்சிக்கு கொள்முதல் தென்காசி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சிலர் சோப்பு கம்பெனிகளுக்கும், பாய்லர் எரி சக்திக்காகவும் கொடுக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலானோர் வடிகால்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டுகின்றனர். மேலும், சாலையோர உணவுக் கடைகள் உள்ளிட்ட சில கடை களில் பயன்படுத்தப்பட்ட எண் ணெயை மீண்டும் மீண்டும் உபயோகி ப்பதாகவும் புகார்கள் உள்ளன.

உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் திட்டம் உணவு பாதுகாப்புத் துறையால் தென்காசி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் சமீரன் இத்திட்ட த்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கூறும்போது, “ஒவ்வொரு கடையிலும் பயன்படுத்திய எண்ணெயை பெற ஆனந்த் ஆயில் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறு வனம் வியாபாரிகளிடம் இருந்து ஒரு கிலோ எண்ணெயை 25 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும். ஒரு டன் எண்ணெய் கொடுத்தால் 30 ரூபாய், அதற்கு அதிகமாக கொடுத்தால் கிலோ 50 ரூபாய் வரை கொள்முதல் செய்கிறார்கள்.

கடைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, எண்ணெய் சேகரிப்பதற்காக பிரத்யேகமாக 25 லிட்டர் கேனை கடைகளுக்கு கொடுக்கின்றனர். கேன் நிரம்பிய வுடன் தகவல் கொடுத்தால் நேரில் வந்து பெற்றுக் கொள்வார்கள். இந்தப் பணி தினந்தோறும் நடைபெறும். இதை காக்கிநாடாவில் உள்ள பயோடீசல் நிறுவனத்துக்கு கொண்டு சென்று டீசல் தயாரிப்பார்கள். உபயோகப் படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் டீசலாக மாற்றப்படுகிறது. இதனால், நீர்நிலைகள், வடிகால்களில் கொட்டுவது தவிர்க்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மூலம் வருவாயும் கிடைப்பதால், வியாபாரிகளுக்கும் பயன் கிடைக்கும். பயன்படுத்தப் பட்ட எண்ணெயில் இருந்து டீசல் தயாரிப்பதால் கச்சா எண்ணெய் க்கான அந்நியச் செலாவணியும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் இத்திட்டத்தில் சேர்ந்து, பயன் பெற வேண்டும்” என்றார்.

குற்றாலம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதி வியா பாரிகள் எண்ணெய் கொண்டுவந்து கொடுத்து, பணத்தை பெற்றுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்