நிவாரணப் பொருட்களுடன் விழுப்புரத்துக்கு 100 பணியாளர்கள் பயணம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி யிலிருந்து நிவர் புயல் நிவாரணப் பணிக்காக, மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது தலைமை யில் 100 தூய்மை பணியாளர்கள் விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு நேற்று புறப்பட்டனர்.

இவர்களுடன், இரு உதவி பொறியாளர்கள், இரு சுகாதார ஆய்வாளர்கள், நான்கு துப்புரவு பணி மேற்பார்வையாளர்களும் சென்றுள்ளனர்.

அத்துடன், மூன்று லாரிகள், நான்கு நீரிறைக்கும் டீசல் இன்ஜின்கள், ஐந்து மரம் அறுக்கும் இயந்திரங்கள், 80 மூடை பிளிச்சீங் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் எடுத்துச்செல்லப்பட்டன.

மாநகராட்சி மைய அலுவலக த்தில் இருந்து, இக்குழுவினரை, ஆணையர் கண்ணன் வழியனுப்பி வைத்தார். மாநகர பொறியாளர் பாஸ்கர், மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்