ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக நவாஸ்கனி எம்.பி. ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிய தாவது: ராமநாதபுரம் மாவட் டத்தில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்க ஒப்பந்தங்கள் விடும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் மக்களால் கூறப்படுகிறது.
ஒப்பந்தங்களை பரிசீலனை செய்யாமல் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு ஒப்பந்ததாரர்களை அனுமதிப்பதால் முழுமையான மதிப்பீட்டில் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தரம் குறைவாக சாலைகள் அமைக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து பல்வேறு சாலைகளை நான் நேரில் ஆய்வு செய்தபோது அதன் தரம் மிகவும் குறைவாக இருந்ததையும், ஒப்பந்த விதிகளின் கீழ் சாலைகள் அமைக்கப்படவில்லை என்பதையும் நேரடியாகப் பார்க்க முடிந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கும், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் நவாஸ்கனி புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago