பொதுமக்களின் போராட்டம் எதிரொலியாக ஈரோடு ஜீவா நகர் சாலையைச் சீரமைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
ஈரோடு திண்டலில் இருந்து வட்டச்சாலையை இணைக்கும் ஜீவா நகர் சாலையில் எல்லா நேரங்களிலும் அதிக போக்குவரத்து இருந்து வருகிறது. மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையில் பல இடங்களில் பழுதடைந்து பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால், ஜீவா நகர் பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் நேற்று முன் தினம் இப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி சார்பில் ஜீவாநகர் சாலையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் மற்றும் பணியாளர்களுடன் பள்ளங்களில் உள்ள நீரை வெளியேற்றி, அவற்றை நிரப்பும் பணி நேற்று நடந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago