‘நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் 49 முகாம்களில் 2,494 பேர் தங்கவைக்கப்பட்டனர்.
‘நிவர்' புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை கடந்த 2 நாட்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை இல்லை. எனினும், அவ்வப்போது லேசான தூறல் மட்டும் இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 371 பள்ளிகள், 116 புயல் பாதுகாப்பு மையங்களில் பொது மக்களை தங்க வைப்பதற்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள் வதற்காக 114 பேரைக் கொண்ட 11 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோரப் பகுதியில் 2 விசைப்படகு மீன்பிடி இறங்குதளங்களில் 550 விசைப் படகுகளும், 15 இடங்களில் 2,000 நாட்டுப் படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புயல் பாதுகாப் புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரான ஷம்பு கல்லோலிக்கர், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கடலோரப் பகுதி களில் உள்ள பாதுகாப்பு மையம், மீன்பிடி இறங்குதளம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஷம்பு கல்லோலிக்கர் கூறியதாவது:
வானியல் ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு புயல் பாதிப்பு இருக்காது. எனினும், அனைத்து வகையிலும் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை. மேலும், பொதுமக்களின் பாது காப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 77 தாழ்வான பகுதிகளில் உள்ள 623 குடும்பங்களைச் சேர்ந்த 1,833 பேர், 25 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 04322 221853, 9445853891 மற்றும் பேரிடர் தொடர்பான புகார்களுக்கு 1077, 04322 222207 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருவதால், பாதுகாப்பான தங்குமிடம் இல்லாத பொதுமக்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார் பில் அமைக்கப்பட்டுள்ள 24 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.அதன்படி, ஆலத்தூர் வட்டத்தில் 5, குன்னம் வட்டத்தில் 3, பெரம்பலூர் வட்டத்தில் 10, வேப்பந்தட்டை வட்டத்தில் 6 என மொத்தம் 24 நிவாரண முகாம்களில் 139 குழந்தைகள் உட்பட மொத்தம் 661 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பெரம்பலூரில் சிக்கித் தவித்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிட தொழில் செய்துவந்த 46 பேரை நேற்று முன்தினம் இரவு வருவாய்த் துறையினர் மீட்டு, செஞ்சேரியில் உள்ள நிவா ரண முகாமில் தங்கவைத்து உணவு, குடிநீர் வழங்கினர். முகாம்களில் தங்கியுள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப் பட்டு, சமூக இடைவெளியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago