ஆர்பிஎஃப் பெண் காவலர்களின் பயிற்சி நிறைவு

திருச்சி காஜாமலையில் 83-வது பேட்ச் ஆர்பிஎஃப் பெண் காவலர்களின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.

திருச்சி காஜாமலையில் உள்ள ஆர்பிஎப் பயிற்சிப் பள்ளியில் 17 மாநிலங்களைச் சேர்ந்த ஆர்பிஎஃப் பெண் காவலர்கள் 392 பேர் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களின் 8 மாத கால பயிற்சி ஜூன் மாதமே நிறைவடைய வேண்டிய நிலையில், கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று காஜாமலையில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே ஆர்பிஎஃப் முதன்மைத் தலைமை பாதுகாப்பு ஆணையரும், ஐஜி-யுமான பிரேந்திர குமார் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், பயிற்சியின்போது சிறந்து விளங்கிய சுமி, அனு ஜான்சன், பூஜா குமாரி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் காஜாமலை ஆர்பிஎஃப் பயிற்சிப் பள்ளி முதல்வர் குமார், திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நித்திஷ் சர்மா மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்