ரூ.15.6 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் நெல்லையில் ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கைகள் மற்றும் ரூ.15.6 கோடியில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பு உள்ளிட்ட புதிய பணிகள் குறித்து ஆட்சியர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் ரூ.15.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், மருத்துவமனையிலுள்ள மருத்துவ சிகிச்சை பிரிவு வெளி நோயாளிகள் பகுதியினையும், அறுவை சிகிச்சை பிரிவு வெளி நோயாளிகள் பகுதியினையும், தீ புண் பிரிவு, பண்டக பிரிவு போன்ற பகுதிகளையும் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனை வளாகத் தினுள் முகக்கவசம் அணியாத வெளி நோயாளிகளுக்கு முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்தினார். தொடர்ந்து துறைத் தலைவர்களுடன் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், மாநகர் நல அலுவலர் சுகன்யா கலந்துகொண்டனர்.

தொடர்ந்து திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பொதுமக் களுக்கு முகக்கவசம் வழங்கி, அதன் அவசியம் குறித்து ஆட்சியர் விளக்கினார்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடை பெற்று வருகின்றன. பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கை யாளர்களிடம் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வலியுறுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணை யாளர் கண்ணன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்