பாளையங்கோட்டையில் சிறைத்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மத்திய சிறை வளாகத்திலிருந்து பேரணியை சிறைத்துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வண்ணார்பேட்டைக்கு சென்று, அங்கிருந்து மீண்டும் மத்திய சிறையில் நிறைவடைந்தது. பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். முன்னதாக கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிறை வளாகத்தில் சிறைவாசி களால் பராமரிக்கப்படும் காய்கறி தோட்டத்தை டிஐஜி பார்வை யிட்டார்.
தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு மற்றும் மூலிகை தோட்டம் உருவாக்கும் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன.
சிறைத்துறை டிஐஜி கூறும் போது, “பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காசிக்கு நாகர்கோவில் சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதால் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக எழும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. வைகுண்டத்தில் சிறை வாசிகளுக்கு வெளியிலிருந்து உணவு வழங்கப்படுவதாக எந்த புகாரும் வரவில்லை. திருநெல் வேலியில் கரோனா தொற்று குறித்து நடத்தப்பட்ட 4-ம் கட்ட விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியில் சிறைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 65 பேர் பங்கேற்றனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago