தி.மலை மாவட்டத்தில் உள்ள அணைகளில் அதிகரிக்கும் நீர்வரத்து

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் மழைகாரணமாக முக்கிய அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. சாத்தனூர் அணையின் நீர் மட்டம் நேற்று 89.55 அடியாக இருந்தது.

தி.மலை மாவட்டத்தின் பல இடங்களில் ‘நிவர்’ புயல் காரண மாக நேற்று முன்தினம் இரவு முதல்லேசான மழை பெய்தது. மாவட் டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஆரணியில் 4.60 மி.மீ ஆகவும், செய்யாறில் 8, வந்தவாசி யில் 15, போளூரில் 3.80, தி.மலை யில் 1, தண்டராம்பட்டில் 3, சேத் துப்பட்டில் 4.80, கீழ்பென்னாத் தூரில் 3.60, வெம்பாக்கத்தில் 18 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

அணைகளின் நிலவரம்

தி.மலை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்க அணைகளில் நீர்வரத்து உள்ளது. 119 அடி உயரமுள்ள சாத்தனூர் அணை யில் 7,321 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடி யும். அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 254 கன அடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில், அணையில் தற்போது 89.55 அடி உயரத்துடன் 2,402 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. குப்ப நத்தம் அணையில் 60 அடி உயர மும் 700 மில்லியன் கன அடி தண் ணீரையும் தேக்கி வைக்க முடியும். அணையில் நேற்று காலை நில வரப்படி 38.38 அடி உயரத்துடன் 270.60 மில்லி யன் கனஅடிக்கு நீர் இருப்பு இருந்தது.

மிருகண்டா அணை 22.97 அடி உயரமும் 87 மில்லியன் கன அடி தண்ணீரையும் தேக்கி வைக்க முடியும். அணைக்கு தற்போது 11 கனஅடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில், தற்போது 6.89 அடி உயரத்துடன் 18.652 மில்லியன் கன அடிக்கு உள்ளது. செண்பகத்தோப்பு அணை 62.32 அடி உயரமும் 287 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணைக்கு தற்போது 12 கன அடி வீதம் நீர்வரத்து இருக் கும் நிலையில், அணையில் 48.87 அடி உயரத்துடன் 163.684 கன அடி வீதம் நீர் இருப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்