‘நிவர்’ புயல் முன் தடுப்புக்காக ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டு அறை

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவல ரான அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்பி ராதா கிருஷ்ணன், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 24 மணிநேர புயல் பாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை மின்நிலையங் களிலும் 15 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மர்,மின்கம்பங்கள், மின்கடத்திகள் உள்ளிட்டவை போதுமான அளவு இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் புயலுக்கு பின் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய துரிதமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்