'நிவர்' புயல் எச்சரிக்கை முன்னேற்பாடு பணி கடலூர் மாவட்டத்தில் 191 தங்கும் இடங்கள் தயார் அமைச்சர் எம்சி. சம்பத் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொழில்துறை எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:

கடலூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் 38 பகுதிகள் மிக அதிக பாதிப்புக்G உள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. 34 பகுதிகள் மிக பாதிப்பு, 19 பகுதிகள் மிதமான பாதிப்பு, 167 பகுதிகள் குறைந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என மொத்தம் 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளன. 56 கால்நடை பாதுகாப்பு மையம், பாம்பு பிடிப்பவர்கள் , நீச்சல் வீரர்கள்,ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவையான எரிபொருளுடன் ஜேசிபி இயந்திரம், லாரி, மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்கள் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வடக்கு மண்டல ஐஜி நாகராஜன்,எஸ்பி ஸ்ரீஅபிநவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் மற்றும் பலர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்