பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை அன்று பரணி தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி மலைக்கோயிலில் நவ.29-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும், ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் பக்தர்கள் வீதம் ஆன் லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். பகல் 12 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்ச்சிகள் யூ-டியூப், பேஸ் புக் மூலம் நேரடி ஒளிரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். முதன்முறையாக பக்தர்கள் கூட்டம் இன்றி மலைக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago