திருச்சி மாவட்டத்தில் மேற்கொள் ளப்படும் மத்திய அரசு திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசுத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது என திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2 முறை கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது. இந்தநிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மக்களவை தொகுதி எம்.பி சு.திருநாவுக்கரசர் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நாடா ளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், மண் வள அட்டை, தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவை உட்பட மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் 43 திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் சு.திருநாவுக் கரசர் கூறியது:
தமிழகத்தில் பிப்ரவரி மாதத் துக்கு பின் சட்டப்பேரவை தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், நிலு வையில் உள்ள மத்திய அரசு திட்டப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. புயல் பாதிப்பு நேரிட்டால் நிவர்த்தி செய்யவும், கரோனா பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago