தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் உழைக்கும் பெண்கள் ஒரு லட்சம் பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் 50 சதவீத மானியத்தில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம் பெறுவதற்கு வாகன விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத் தொகை அதிகபட்சமாக ரூ.31,250 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 18 வயது பூர்த்திய டைந்த, ஆண்டு வரு மானம் ரூ.2.50 லட்சத்துக்குள் உள்ள உழைக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதரவற்ற மகளிர், விதவைகள், முதிர்கன்னி கள், மாற்று பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது சான்றிதழ், புகைப்படம், இருப்பிடச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது), இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது எல்எல்ஆர், வருமானச் சான்று அல்லது சுயச் சான்று, வேலை பார்ப்பதற்கான பணிச் சான்று, முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள் அத ற்கான சான்று, சாதிச் சான்று (எஸ்சி, எஸ்டிக்கு மட்டும்), மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்று, இருசக்கர வாகனத்துக்கான விலைப்புள்ளி ஆகியவற்றுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என்று, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago