திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் அறிக்கை:
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து திருக்கார்த்திகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைப்பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வர உள்ளதால், பொதுமக்கள் வணிகப் பகுதிகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் கடைகளுக்கோ, வணிக வீதிகளுக்கோ செல்லக் கூடாது. வணிக நிறுவனங்களில் உள்ள கை கழுவும் வசதியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். வயோதிகர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் கடை வீதிகளுக்குச் செல்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். பேருந்துகள், கார்கள், ஆட்டோக்களில் பயணம் செய்யும் போது சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கண்டிப் பாக பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கை கழுவும் வசதி, கை சுத்தம் செய்யும் திரவ வசதி, உடல் வெப்ப பரிசோதனை வசதி ஆகியவற்றை வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை 9 சிறப்பு குழுக்கள் கண்காணித்து வருகின்றன.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago