செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் முரளி, துணைத் தலைவர் ராஜேந்திர ராவ், செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் தென்காசி எம்பி தனுஷ் எம்.குமாரிடம் மனு அளித்தனர்.
அதில், “செங்கோட்டை- விருதுநகர் மற்றும் தென்காசி- திருநெல்வேலி வழித்தடங்கள் வழியாக தமிழகத் தின் பல நகரங்களுக்கும், வெளி மாநில நகரங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை ரயில் நிலையத்தில் பிட் லைன் வசதி அமைக்க வேண்டும். செங்கோட்டை - விருதுநகர், தென்காசி- திருநெல்வேலி தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நவீனமயமாக்க லுக்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.
தென்காசி ரயில் நிலையத்தில் முதியோரின் நலனுக்காக பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். மூடப்பட்ட கரிவலம் வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். செங்கோட்டை- விருதுநகர் இடையே தொடங்கப்பட உள்ள ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டத்தை ஒரேகட்டமாக செய்து முடிக்க வேண்டும் ” என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago