தமிழகத்தில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் காரணமாக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், அவசர தேவைக்கு அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ கத்தில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலானது, இன்று மகாலிபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 125 கி.மீ., அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நிவர் புயல் காரண மாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ள அவசர தேவைகளுக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077 மற்றும் 04179-222111 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள லாம்.
மேலும், அந்தந்த வருவாய் கோட்டங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறைகள் அமைக் கப்பட்டுள்ளன. எனவே, பொது மக்கள் கனமழை மற்றும் புயல் காரணமாக அரசு அதிகாரிகளை தொடர்புகொள்ள திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் 04179-220088 அல்லது 94450 00418, வாணியம்பாடி வருவாய் கோட்டாட் சியர் அலுவலகம் 04174-234488 அல்லது 75980 00418, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் 04179-220091 அல்லது 94450 00511, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் 04179-242299 அல்லது 90802 00043, வாணியம்பாடி வட் டாட்சியர் அலுவலகம் 04174-232184 அல்லது 94450 00512, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் 04174-221502 அல்லது 94423 15427 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கனமழை காரணமாக குடிசைகள், வெள்ளம் வரக் கூடிய தாழ்வானப் பகுதிகளில் வசிப்போர் அருகேயுள்ள பள்ளிக் கட்டிடங்களுக்கு சென்று பாது காப்பாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், அத்தியாவசியப் பொருட்கள் வழங்க உரிய ஏற் பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
ஏரிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் சில இடங்கள் ஆழமாக இருப்பதால் நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள் வெளியே செல்ல பெற்றோர் அனுமதி வழங்க வேண்டாம். கனமழை காரணமாக மின்கம்பங்கள், மின்வயர்கள் கீழே விழும் ஆபத்துள்ளதால் குழந்தைகளை பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள், பேட்டரி விளக்குகள், குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ள வேண் டும். பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago