அண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பவனி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் 5-ம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் பவனி வந்து அருள்பாலித்தனர்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 17-ம் தேதி துர்க்கை அம்மன் உற் சவத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் ஆரம்பமானது. கரோனா பரவல் காரணமாக, மாட வீதியில் நடைபெற வேண்டிய உற்சவம், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் பஞ்சமூர்த்திகளின் உற்சவமும் நடைபெற்றது. குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

63 நாயன்மார்கள் பவனி

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 63 நாயன்மார்கள் பவனி இன்று நடைபெற உள்ளது. முன்னதாக, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடை பெறும். இதையடுத்து, பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் இன்றிரவு நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்