வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பாக நண்பரை கொலை செய்ததாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தவரிடம் வேப்பங் குப்பம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தகராறில் நண்பர் சீனிவாசன் என்பவரை கொலை செய்துவிட்டதாக லோக நாதன் (34) என்பவர் நாகப்பட்டினம் மாவட்டம் வள்ளிபாளையம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சரணடைந்துள்ளார். அவர், வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் அடுத்துள்ள அத்தி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் வேப்பங்குப்பம் காவல் நிலை யத்தில் வழக்கு ஏதாவது பதி வாகியுள்ளதா? என ஆய்வு செய் யப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி ஒடுக்கத்தூர் அருகே வேணுகோபால் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஆணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அப்போது, ஒடுக்கத்தூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த செல்வகுமார் அளித்த புகாரின்பேரில் தண் ணீரில் மூழ்கியதால் இறந்த நபர் அடையாளம் தெரியவில்லை என்ற அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருப் பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், வேப்பங்குப்பம் அருகேயுள்ள ஒண்டி ராஜபாளையம் கிரா மத்தைச் சேர்ந்த சீனிவாசனும், லோகநாதனும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஒரு நாள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சீனிவாசனை தாக்கி கொலை செய்து உடலை கிணற்றில் வீசிவிட்டு லோகநாதன் தப்பி யுள்ளார். சில ஆண்டுகளாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த லோகநாதன், மன உளைச்சலால் காவல் நிலையத்தில் சரண டைந்தது தெரியவந்தது. இந்த தகவலை அடுத்து வேப்பங்குப்பம் காவல் துறையினர் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு விரைந்து சென்று அவரை வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அவரிடம், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago