மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை கருமத்தம்பட்டியில் நேற்று முன்தினம் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் தடையை மீறி மாநாடு நடத்தப்பட்டதாக, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் உள்ளிட்ட 90 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் தடுப்புச் சட்டம், மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துதல், அரசு உத்தரவை மீறுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் கருமத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago