கரோனா விதிமுறை மீறிய 2 நீட் பயிற்சி மையங்களுக்கு ‘சீல்’

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நீட் பயிற்சி மையங்கள் உள்ளன. கரோனா பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இணையவழியில் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும். நேரடி யாக மாணவ, மாணவியரை பயிற்சி மையத்துக்கு வரவழைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், நாமக்கல்லில் உள்ள இரு தனியார் நீட் பயிற்சி மையங்களில் கரோனா விதிமுறைகளை மீறி மாணவ, மாணவியர் நேரடியாக வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது, என நாமக்கல் கோட்டாட்சியர் எம்.கோட்டைக்குமாரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அப்பயிற்சி மையத்தில் நேரில் ஆய்வு செய்த கோட்டாட்சியர், அரசு விதிமுறைப்படி இணையவழியில் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும். இதைமீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தார்.

எனினும், அப்பயிற்சி மையங் களில் கரோனா விதிமுறை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கோட்டாட்சியர் கோட்டைக்குமார் குறிப்பிட்ட அந்த இரு பயிற்சி மையங்களுக்கும் சீல் வைக்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்