நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை மட்டுமின்றி கிருமிநாசினியும் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆலையில் கிருமிநாசினி உற்பத்தி செய்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக ஆலையின் முதுநிலை ரசாயனர் சுப்ரமணி கூறுகையில், கிருமிநாசினி உற்பத்தி செய்ய தமிழகத்தில் இரு கூட்டுறவு ஆலைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இதில் ஒன்று சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. மற்றொன்று உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை.
இங்கு கடந்த ஏப்ரல் முதல் நம்பர் மாதம் வரை 19 ஆயிரத்து 500 லிட்டர் கிருமி நாசினி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், 15 ஆயிரத்து 639 லிட்டர் கிருமிநாசினி அரசு அலுவலகம், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ.354 என மொத்தம் ரூ.55 லட்சத்து 36 ஆயிரத்து 383 மதிப்பில் கிருமிநாசினி விற்பனை செய்யப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago