மானூர் ஊராட்சி ஒன்றியம் கங்கைகொண்டான் ஊராட்சி மக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கங்கைகொண்டான் ஊராட்சிக்கு, கோவில்பட்டி நகராட்சி மூலம்தாமிரபரணியிலிருந்து கோவில்பட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும்பைப்லைன் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பைப்லைன் 1976-ல் அமைக்கப்பட்டது. தற்போது கோவில்பட்டி நகராட்சிக்கு வேறு பாதையில் புதிய பைப்லைன் அமைக்கப்பட்டதால், கங்கைகொண்டான் வழியாக செல்லும் பைப்லைன் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை. ஏதாவது பழுது ஏற்பட்டாலும் சீரமைக்கபல நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, கங்கைகொண்டான் ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் புதிதாக உறைகிணறு அமைத்து, அதில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சிதம்பரநகர் குடியிருப்போர் நலவாழ்வு ஆரோக்கிய சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “ சிதம்பரநகரில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். நிரந்தர நியாயவிலை கட்டிடம் கட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி
இந்து மக்கள் கட்சி தென்மண்டல இளைஞரணி தலைவர் ஜெ.வி.மாரியப்பன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “சபரிமலைக்கு செல்ல கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி, நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேரைதரிசனத்துக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாளையங்கோட்டை அனைத்து கோயில் தசரா விழா கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “ஆயிரத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான தசரா நிகழ்ச்சிக்குரிய இடத்தில் கட்டிடம் கட்டுவதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் ஏ.எம். மைதீன் பாதுஷா அளித்த மனுவில், “ மேலப்பாளையம் கரீம் நகர் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட தெருவிளக்கு களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
புதிரை வண்ணார் எழுச்சி பேரவை மாவட்டச் செயலாளர் சு.ரமேஷ் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “ புதிரை வண்ணார் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இச்சமூக மக்கள் வாழும் பகுதியில் மயானம் அமைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago