திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டம் வாயிலாக மொத்தம் 448 பொதுநல மனுக்களை பெற்ற ஆட்சியர் சிவன் அருள் தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, 44 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, விதவை சான்றிதழ் ஆகியவற்றை தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.

அப்போது, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், துணை ஆட்சியர்கள் சரஸ்வதி, பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்