ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகங்களில் ‘நிவர்’ புயல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ‘நிவர்’ புயலை சமாளிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘நிவர்’ புயலாக இன்று (24-ம் தேதி) மாறி காரைக்கால் மற்றும் மகாலிபுரம் கடற்கரை இடையில் நாளை கரையை கடக்க உள்ளது. இதனால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை பணிகள் தொடர்பாக ஆட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் (ராணிப்பேட்டை) சிவன் அருள் (திருப்பத்தூர்)ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் ஆட்சி யர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக் கப்பட்டுள்ளது. மழைசேத விவரங்களை கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1077 அல்லது 0416-2258016 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். குடிசைகள், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினர் அருகே உள்ள பள்ளி கட்டிடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அங்கு, வருவாய்த் துறையினர் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும். ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை களுக்கு செல்ல வேண்டாம். தென்னை மரங்களை பாதுகாக்க சில தென்னங்கீற்றுகள், இளநீர் குலைகளை வெட்டுவதால் காற்றின் வேகத்துக்கு மரங்கள் விழுந்துவிடாமல் காப்பாற்ற முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலை சமாளிக்கும் வகையில் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் பாதிக்கப்படுபவர்களை தங்க வைக்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. ஏரிக்கரை மற்றும் மதகுகளில் உடைப்பு ஏற்பட்டால் சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப் பட்டுள்ளது. அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தை 04177-236360 அல்லது 94450-00507, ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தை 04172-235568 அல்லது 94450-00505, வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தை 04172-232519 அல்லது 94450-00506, சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தை 04172-290800 அல்லது 99437-66539, நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தை 04177-247260 அல்லது 80151-37003, கலவை வட்டாட்சியர் அலுவலகத்தை 97896-41611 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ஆட்சியர் அலுவலக கட்டுப் பாட்டு அறையை கட்டணம் இல்லாத 1077 அல்லது 04172-273166/273189 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், மழைசேத பாதிப்பு தொடர்பாக வாட்ஸ் அப் வழியாக 94896-68833 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ கத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில், நாளை (25-ம் தேதி) பலத்த காற்றுடன் அதிக அளவிலான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விவசாயிகள் நெல் வயல்களில் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி வயலில் தேங்கியுள்ள நீரினை வடித்துவிட வேண்டும்.

மேலும், பயிர்கள் சாகுபடி செய் துள்ள விவசாயிகளும் வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக நீர் வடிந்திட வாய்க்கால்களை வெட்ட வேண்டும். தென்னை சாகுபடி செய் துள்ள விவசாயிகள், மரங்களில் உள்ள முதிர்ந்த காய்களை பறிக்க வேண்டும். தென்னை மரங்களில் அதிக அளவில் இளநீர் இருந்தால் சில இளநீர்களை பறித்து மரத்தில் அதிக எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே, திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உடனடியாக முன்னேற்பாடுகளை செய்து, புயல், மழையில் இருந்து பயிர்களை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்