கரூர் திருகாம்புலியூரில் திமுக வினரின் சுவர் விளம்பரத்தில் ‘கோ பேக் மோடி’ என எழுதப்பட்டது தொடர்பாக பாஜக, திமுகவினர் இடையே மோதல் ஏற் பட்டது.
அதன்பின், கரூர் புதுகுளத்துப் பாளையம் வாரச்சந்தை அருகே யுள்ள கட்டண கழிப்பிட சுவரில், ‘கோ பேக் மோடி’ என எழுதப்பட்டிருந்தது குறித்து கரூர் கிராம நிர்வாக அலுவலர் அங்குராஜ் அளித்த புகாரின் பேரில், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வெங்கமேடு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அதே இடத்தில் திமுக குறித்து அவதூறாக சுவர் விளம்பரம் செய்திருந்தது தொடர்பாக, பாஜக கரூர் வடக்கு நகர பொதுச்செயலாளர் ரமேஷ்(37), செயலாளர் ஆறுமுகம்(53) ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதேபோல, தண்ணீர்பந்தல் பகுதியில் ஒரு வீட்டில் பிரதமர் மோடியை விமர்சித்து சுவர் விளம்பரம் எழுதியது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி(32), லோகாம்பாள்(40), பானுப்ரியா ஆகியோர் மீது வாங்கல் போலீஸாரும், திருகாம்புலியூரில் பிரதமர் மோடியை விமர்சித்து எழுதப்பட்டிருந்த விளம்பரத்தை அழிக்கச் சென்றபோது திமுகவினரை தரக்குறைவாக விமர்சித்ததாக பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் கணேசமூர்த்தி மீது கரூர் நகர போலீ ஸாரும் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago