வாக்காளர் பட்டியலில் டிசம்பர் 15 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, விக்கிர வாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளிகளில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தல் முகாமை ஆட்சியர் அண்ணா துரை நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியது:

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியின் கீழ், அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தப் பணிகள் நடைபெறும்.

புதியதாக பெயர் சேர்ப்பதற்கு விரும்பும், வாக்காளர்கள் படிவம் 6-லும், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்7-லும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஏவிலும், திருத்தம் செய்ய படிவம் 8-லும், ஒரு சட்ட மன்ற தொகுதிக்குள்ளேயே வாக்காளர்களின் வசிப்பிடம் மாறியி ருந்தால் படிவம் 8-ஏவிலும் விண் ணப்பிக்க வேண்டும். கோரிக்கை மனுக்களை சார் ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கொடுத்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (https;//www.nvsp.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மக்கள் வாக் காளர் பட்டியல் தொடர்பாக தகவல்களுக்கு தொலைபேசி எண்.1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரி வித்தார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், கோட்டாட்சியர் ராஜேந் திரன், வட்டாட்சியர்கள் வெங்கட சுப்பிரமணி, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்