கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் இரு குழுக்களாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன.
இவற்றில் 20 யானைகள் மட்டும், போடூர்பள்ளம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, பேரண்டப்பள்ளி வனப்பகுதி நோக்கிச் சென்றன. நேற்று முன்தினம் மாலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க சாலையோரம் யானைகள் காத்திருந்தன. இதனையறிந்த வனத்துறையினர் இரவில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறம் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி யானைகள் சாலையைக் கடக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, சாலையைக் கடந்து, பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன. அங்கிருந்து ராமச்சந்திரம், சுன்டட்டி கிராமப் பகுதிகளுக்குச் சென்ற யானைகள், ராகி உள்ளிட்ட விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி விட்டு, மீண்டும் பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்றன. தற்போது யானைகள் 2 குழுக்களாக உள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago