உரம் விற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உரம் விற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித் துள்ளார்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், சிறு தானியம், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்களுக்கு தேவையான உரங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 3830 மெட்ரிக் டன் யூரியா, 2166 மெட்ரிக் டன் டிஏபி, 1280 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6776 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் தற்போது இருப்பு உள்ளது.

விவசாயிகள் அல்லாதவர் களுக்கு உரம் விற்பனை செய்வது, ஒரு நபருக்கு அதிக உரங்களை விற்பனை செய்வது, உர விலை விவரப் பலகை வைக்காமல் உரங்களை விற்பனை செய்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு உரங்கள் மாற்றம் செய்வது, விவசாயிகளுக்கு ரசீது கொடுக்க மறுப்பது உள்ளிட்ட தவறுகளில் உர விற்பனையாளர்கள் ஈடுபட்டால் உரக் கட்டுப்பாட்டு மற்றும் உர நகர்வு ஆணையின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்