திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 19.50 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 2, மணிமுத்தாறு- 1, நம்பியாறு- 8, கொடுமுடியாறு- 10, சேரன்மகாதேவி- 3.20, ராதாபுரம்- 2.60, பாளையங்கோட்டை- 5, திருநெல்வேலி- 1.
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலையில் 125 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,777 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் 2.20 அடி உயர்ந்து, நேற்று காலையில் 127.20 அடியாக இருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 142.91 அடியிலிருந்து 144.06 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 93.15 அடியிலிருந்து 93.70 அடியாகவும், வடக்குபச்சையாறு நீர்மட்டம் 17 அடியில் இருந்து 18 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.46 அடியில் இருந்து 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 37.25 அடியில் இருந்து 37.75 அடியாகவும் உயர்ந்திருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் சில நாட்கள் தொடர் மழை பெய்ததால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 105.50 அடியாக இருந்தது.கடந்த 3 நாட்களாக மழை குறைந்து வெயில் அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் சிவகிரியில் 18 மி.மீ., கருப்பாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் வேறு எங்கும் மழை பெய்யவில்லை. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது வெயில் தலைகாட்டியது. அதே நேரம் நேற்று முன்தினம் இரவு வரை பெய்த மழையால் அணைப்பகுதிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக தக்கலையிலும், அடையாமடையிலும் தலா 32 மிமீ., மழை பெய்திருந்தது. கோழிப்போர்விளை 22, குளச்சல் 11, பெருஞ்சாணி 12, பேச்சிப்பாறை 11, கொட்டாரம் 10, சிற்றாறு ஒன்றில் 11 மிமீ., மழை பதிவானது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.16 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 726 கனஅடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது. அணைக்கு 434 கனஅடி தண்ணீர் வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago