விவசாய நிதி உதவி திட்டத்தில் மோசடி தொகையை 26-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில் முறைகேடாக பெறப்பட்ட பணத்தை அரசு கணக்கில் வரும் 26-ம் தேதிக்குள் செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டத் தின் கீழ், மூன்று தவணையாக தலா ரூ.2 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. தி.மலை மாவட்டத்தில், 43,323 பெயர்கள் போலியாக சேர்க்கப்பட்டு, ரூ.15 கோடி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 36 ஆயிரம் நபர்களிடம் இருந்து ரூ.11 கோடி அளவுக்கு நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வசூலிப்பதில், அதிகாரிகள் மெத்தனமாக செயல் படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், மோசடியாக பெற்றத் தொகையை அரசு கணக் கில் வரும் 26-ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் சம்பந்தப் பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேளாண், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விவசாயி அல்லாதோர் முறைகேடாக பெற்ற தொகையை விரைவாக வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

முறைகேடாக பெற்ற தொகையை வரும் 26-ம் தேதிக்குள் திரும்ப செலுத்த தவறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்