ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆய்வு

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதனை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 16-ம் தேதி அனைத்து மாவட் டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வெளி யிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 769 வாக்காளர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 692 வாக் காளர்களும் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மட்டுமில்லாமல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1-1-2021 தேதியின் அடிப்படையில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளும் பணியும் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்த நாட்களில் பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத் தப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் திருத் தங்கள் மேற்கொள்ள வசதியாக சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல், டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை கங்காதர முதலியார் மெட்ரிக் பள்ளி, வாழைப்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளி, மேலப்பழந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். அதேபோல், திருப்பத்தூர் டோமினிக் சேவியோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பான சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேரில் ஆய்வு செய்தார். தொரப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், ஆய்வு செய்த பார்த்தீபன், பெறப்பட்ட மனுக்கள், இருப்பில் உள்ள மனுக்கள் குறித்தும் அலுவலர்களிடம் அவர் விசாரித்தார்.

அதேபோல், அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்