திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத் தோப்பு அணை யின் நீர்மட்டம் 48 அடியை கடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே செண்பகத் தோப்பு அணை கட்டும் பணி கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 62.32 அடி உயர நீர் மட்டத்தில், 287 மில்லியன் கன அடிக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் அணைகட்டப்பட்டது. அணை கட்டு மானம், கடந்த 2007-ம் ஆண்டு நிறைவு பெற்றிருந்தாலும், அணையின் 7 ஷட்டர்களும் செயல்படாததால், முழு கொள்ளளவை நிரப்ப முடிய வில்லை.
அணையில் கடந்த 14 ஆண்டுகளாக சுமார் 47 அடி வரை மட்டுமே தண்ணீரை சேமிக்க முடிந்தது. வட கிழக்கு பருவ மழை காலத்தில் அணைக்கு வரும் தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்டதால் வேதனை அடைந்த விவ சாயிகள், 7 மதகுகளை சீரமைத்துக் கொடுக்க வலி யுறுத்தினர்.
இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, ரூ.16.37 கோடி மதிப்பில் 7 ஷட்டர்களை சீரமைக்கும் பணி நடைபெற்று கடந்த மாதம் நிறைவு பெற்றுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
புதிதாக 7 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், முழு கொள்ளளவுக்கு தண் ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.28 அடியாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு வரை, அணையில் 47.43 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அணை கட்டியதில் இருந்து முதன்முறையாக, இந்த ஆண்டு தான் நீர் மட்டம் 48 அடியை எட்டியுள்ளது.
அணையில் 158.119 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 29 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில், அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் அணையை சுற்றியுள்ள கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 88.60 அடியாக உள்ளது. அணையில் 2,300 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 358 கனஅடி தண்ணீர் வருகிறது.
மேலும், 60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக உள்ளது. அணையில் 340 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து ஏரி களுக்கு விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல், 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 6.56 அடியாக உள்ளது. அணையில் 17.669 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago