நடுக்குப்பம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

By செய்திப்பிரிவு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த நடுக்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “மருத்துவ படிப்பில் சேருவதற்கு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை முதல்வர் பழனிசாமி நடை முறைப்படுத்தி உள்ளார்.

அதன்மூலம், தி.மலை மாவட் டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த 8 மாணவர்களின் மருத்து வக் கணவு நனவாகும் வகையில், மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதல்வர் செயல் படுத்தி வருகிறார். அவரது உத்தரவை தொடர்ந்து, தி.மலை மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில் 91 மினி கிளீனிக்குகள் திறக்கப்பட உள்ளன. அங்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியாற்றுவார்கள். இன்றைய மருத்துவ முகாமில், புற்றுநோய், காது, மூக்கு, தொண்டை பிரிவு, மகப்பேறு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

இதையடுத்து, 6 கர்ப்பிணி களுக்கு அம்மா சத்துணவு பெட்டகம், ஒருவருக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார். மேலும் அவர், மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் தடகளம் மற்றும் கையுந்து பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார். இதை யடுத்து, 4 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் அஜீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்