நந்தன் கால்வாயை சீரமைக்க 19 விவ சாயிகள் தங்கள் நிலத்தை அரசுக்கு தான மாக வழங்கினர்.
விழுப்புரம்,திருவண்ணாமலை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நந்தன் கால்வாயை சீரமைக்க அரசு ரூ. 27 கோடி ஒதுக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கால் வாயை சீரமைக்கும்பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கால்வாயை அகலப்படுத்த சித்தரசூர், துத்திப்பட்டு கிராமங்களில் தனிநபர்களின் நிலங் களை பெறவேண்டிய சூழல் ஏற்பட்டது.
நந்தன் கால்வாயின் பயன்பாடு குறித்தும், இந்தத் திட்டத்திற்கு 1.35 ஏக்கர் நிலம்தேவைப்படுவது குறித்தும் கிராம மக்களிடம் அரசு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதையடுத்து கால்வாயை சீர மைக்க தேவையான நிலத்தை தானமாக தர விவசாயிகள் ஒப்புக் கொண்டனர்.
சித்தரசூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன்,பரசுராமன், ரேமலா, சக்க ரபாணி, தேவநா தன், ஜெயசுந்தரம், குருநாதன், காமராஜ், பூவரசி, சிவகண்டன், மணி, வீரப்பன், பாபு,ரத்தினம் மற்றும் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாவாடை, முருகன், சங்கரி, சரசு, ஜெயந்தி ஆகிய 19 பேரும் தங்கள் நிலத்தைஅரசுக்கு தானமாக வழங்க, முறைப்படி பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று ஆட்சியர்அலுவலகத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் அரசுக்கு தானம் கொடுத்த பத்திரத்தை 19 விவசாயிகள் வழங்கினர். ஆட்சியர்அண்ணாதுரை, கூடு தல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுக ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த கோவிந்தசாமி, 1970ம்ஆண்டு நந்தன் கால்வாய் திட்டத்தை புனரமைக்க ஏற்பாடு செய்தார். இப்பணிகள் கடந்த 1976ம் ஆண்டு நிறைவு பெற்றது. நந்தன்கால்வாய் திட்டத்திற்கான 1970-76ம் ஆண்டுகளில் ரூ.128.36 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு பணிகள் நடைபெற வில்லை. 2013-14ம் ஆண்டு ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நந்தன் கால்வாய் திட்டம் துவங்கும் இடத்தில் இருந்து12.40 கி.மீ., துாரத்திற்கு மத்திய பெண்ணை யாறு வடிநில உபகோட்டத்தின் கீழ் பராம ரிப்பு பணிகள் செய்யப்பட்டது. மேலும், 2013-16ம் ஆண்டுகளில் ரூ.988.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நந்தன்கால்வாய் புனரமைப்பு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டப் பணிகள் தீவிரமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago