திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கன மழை காரணமாக, மலையடிவாரத்தில் உள்ள நீர்த்தேக்கங்களான மஞ்சளாறு அணை, மருதாநதி அணை நிரம்பியதையடுத்து திறக்கப்பட்டன.
கீழ்மலைப் பகுதிகளில் பெய்த மழையால் ராஜவாய்க்காலில் இருந்து, ஆத்தூர் நீர்த்தேக்கத்துக்கு வினாடிக்கு 10 கன அடி நீர் வருகிறது. தற்போது நீர்மட்டம் 15.6 அடியாக உள்ளது (மொத்தம் 23.5 அடி). நீர்வரத்து அதிகரித்தால் சில நாட்களில் நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது. இதையடுத்து உபரிநீர் குடகனாறு ஆற்றில் விடப்படும். நீண்டகாலமாக இருந்துவரும் குடகனாறு ஆறுப் பிரச்சினைக்கு வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ந்து வடகிழக்குப் பருவமழைப் பொழிவு இருக்கும்பட்சத்தில் குடகனாற்றில் நீர் சென்று அதனைச் சார்ந்த கண்மாய்கள் நிரம்பும் வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago