திருந்திய நெல் சாகுபடியை மேற்கொண்டு மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நெல் சாகுபடியில் திருந்தியநெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைப்பிடித்து மாநிலத்தி லேயே அதிக உற்பத்திபெறும் விவசாயிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பரிசாக ரூ.5 லட்சமும், தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. குடியரசு தின விழாவின்போது, முதல்வர் இந்த பரிசினை வழங்க வுள்ளார். நடப்பு நிதி ஆண்டில் இப்போட்டியில் பங்குபெற, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினைக் கடைபிடித்து நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் பங்கேற்க குறைந்தது 50 சென்ட் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண் டும். நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் ஆவார். பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago