ஐஸ் விற்பவரின் மகன் மருத்துவம் பயில்வதற்கான முழு கல்விக் கட்டணத்தையும் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றார்.
கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. ஐஸ் வியாபாரி.இவரது மகன் மாரிமுத்து வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில மாரிமுத்துவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
எனினும் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாரிமுத்து இருப்பதை அறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாணவர் மாரிமுத்து மற்றும் அவரது பெற்றோரை நேற்று நேரில் அழைத்து முதலாமாண்டு கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். மேலும், மாணவரின் மொத்த கல்விக் கட்டணத்தையும் ஏற்றுக்கொள்வதாக அவர் களிடம் தெரிவித்தார். மாண வர் மாரிமுத்து மற்றும் அவரது பெற்றோர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நன்றி தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago