உதயநிதி வருகையால் திருச்சியில் குவிக்கப்பட்ட 1,400 போலீஸார்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் பல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். திருச்சி சிந்தாமணி, கலைஞர் அறிவாலயம் மற்றும் மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாரூருக்கு புறப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, அவர் பங்கேற் கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா மேற்பார்வையில் 3 எஸ்பி-க்கள், 6 ஏடிஎஸ்பி-க்கள், 9 டிஎஸ்பி-க்கள், 37 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1,400 போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட கலவரத் தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. காவல் துறையினரின் வழக்கத்துக்கு மாறான இந்த திடீர் நடவடிக்கை திமுகவினரிடம் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தொடர்ந்து, திருவாரூரில் நடைபெற்ற நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கரோனா காலத்திலும் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு உறுதுணையாக இருந்தது எதிர்க்கட்சியான திமுக தான். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்றார்.

அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் சகோதரி இல்லத்துக்கும், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினை விடத்துக்கும் அவர் சென்றார்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, ஆடலரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்