முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

By செய்திப்பிரிவு

குறுக்குத்துறை சுப்பிரமணியர் சுவாமி கோயில், பாளையங் கோட்டை சாலைகுமாரசுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லை யப்பர் கோயில் ஆறுமுகர் சந்நிதி, வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணியர் கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் சுப்பிரமணியர் சந்நிதி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று கோயில் வளாகங்களில் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இரவு 6 மணிக்கு உட்பிரகாரத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

குதிரை வாகனத்தில் எழுந் தருளிய சுவாமி சுப்பிரமணியர், யானை முகா சூரன், சிங்கமுகா சூரன், தாரகா சூரன், பானுகோபன், சூர பத்மன் ஆகியோரை வதம் செய்தார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி விழா ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், சண்முகருக்கு அபிஷேகம் மட்டும் நடைபெற்றது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில், குமாரகோயில் வேளிமலை முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், தோவாளை செக்கர்கிரி முருகன் கோயில் வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்