உச்சிப்புளி சார் கருவூலத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் கணக்காளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக இருப்பவர் பாத்திமா ரஸியா சுல்தானா (28). இவர், தனது பள்ளியில் பணிபுரிவோரின் பொது வைப்பு நிதிக்கான ஆவணத்தைப் பெற உச்சிப்புளியில் உள்ள சார் கருவூல அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு கணக்காளராகப் பணிபுரியும் களஞ்சிய ராணி(54), ஆவணத்தைத் தருவதற்கு ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பாத்திமா ரஸியா சுல்தானா ராமநாதபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி, பாத்திமா ரஸியா ராணி நேற்று மாலை உச்சிப் புளியில் உள்ள சார் கருவூல அலுவலகத்துக்குச் சென்று களஞ்சிய ராணியிடம் பணத்தைக் கொடுத்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், களஞ்சிய ராணியை கைது செய் தனர்.
மேலும், கூடுதல் சார் கருவூல அதிகாரி செல்வகுமார் அறை யிலிருந்து கணக்கில் வராத ரூ.13,650-ஐ கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago