காரைக்குடி அருகே தட்டி பின்னும் தொழிலாளி மகளுக்கு மருத்துவ படிப்பில் இடம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தட்டி பின்னும் தொழிலாளி மகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.அமிர்தம் நீட் தேர்வில் 255 மதிப்பெண்கள் பெற்றார்.

அவருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவரது தந்தை ராமு, தாயார் ராஜேஸ்வரி தட்டி பின்னுதல் தொழில் செய்து வருகின்றனர். கூலித் தொழிலாளி மகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அம்மாணவியை தலைமைஆசிரியர் பிரிட்டோ, உதவி தலைமைஆசிரியர் இன்பசேகர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்