நந்தன் கால்வாயக்கு தனி பாசனப் பிரிவு அமைக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நந்தன் கால்வாயை சீரமைக்கக்கோரி அரசிடம் பலமுறை விவசாயிகள், பொதுநல அமைப்புகள் முறையிட்டும் பலனில்லை. இப்பகுதியினர் ஒருங்கிணைந்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மூலம், கடந்த 2 ஆண்டுகளாக கால்வாய் அடைப்புகளை நீக்கியுள்ளோம். இதனால் கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட் டத்தில் பல ஏரிகள் நிரம்பின. 42 ஆண்டுகளுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தது.
தற்போது பெய்து வரும் பருவமழையினால் கீரனூர் அணை நிரம்பி திறக்கப்பட்டது. இதனால் கொளத்தூர் ஏரிக்குதண்ணீர் வருகிறது. ஆனால் மாவட்ட எல்லையில் உள்ளஷட்டர்கள் மூடப்பட்டதால் விழுப்புரம் மாவட்டத்திற்குள் தண்ணீர் வரவில்லை. இது குறித்து பொதுப்பணித்துறையிடம் முறையிட்டும் பலனில்லை.
இதனால் விழுப் புரம் மாவட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே மாவட்ட எல்லையில் மூடப்பட்ட ஷட்டர் களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீரனூர் அணையிலிருந்து 37 கி.மீ நீளமுள்ள கால்வாயில் மொத்தம் 288 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் ஏற்படும் பழுதை நீக்க திண்டிவனம் பொதுப்பணித்துறையினரை அணுக வேண்டியுள்ளது. எனவே செஞ்சியில் பொதுப் பணித்துறையின் நீர்பாசனப்பிரிவு உபகோட்டம் அமைக்க வேண்டும்.
நந்தன் கால்வாயை மேம்படுத்த, அரசு ரூ. 27 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நந்தன் கால்வாயை பராமரிக்க, முறைப்படுத்தப்பட்ட கால்வாய் பாசனமாக மாற்ற வேண்டும். எனவே இதற்கு தனி பாசனப்பிரிவு அமைத்து, உதவி செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago