மதுரையில் சில நாட்களாக பலத்த மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்துக்கு வரும் மழை நீர் கால்வாய்கள் ஆக்கிர மிக்கப்பட்டதால் தண்ணீர் வருவது தடைபட்டது. அதனால் இந்த தெப்பக்குளத்தில் நடக்கும் தெப்பத் திருவிழாவும் தற்போது நிலை தெப்பமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிர மிப்புகளை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றினர். பெரியார் பஸ் நிலையம், டவுன் ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழை நீரை தெப்பக்குளத்துக்கு கொண்டு வர கால்வாய்களில் மாநகராட்சி தூர்வாரியது. ஆனால், அத் திட்டத்தை முழுமையாக நிறை வேற்றாமல், மாநகராட்சி பாதி யிலேயே விட்டுவிட்டதாக கூறப் படுகிறது. இதனால் கடந்த மாதம் சிறிதளவு மழை நீர் வந்த நிலையில், தற்போதும் முற்றிலும் நின்றுவிட்டது.
மதுரையில் பெய்துவரும் மழையால் பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலைய பகுதி களில் வழக்கம்போல் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. டவுன் ஹால் ரோட்டிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் இப்பகுதிகளில் இருந்து மழைநீர் கூடலழகர் பெருமாள் தெப் பத்துக்கு வரவில்லை. இத் தெப்பம் மட்டும் வழக்கம்போல் வறண்டு கிடக்கிறது.
எனவே மாநகராட்சி நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப் புகளை உடனே அகற்றி கூடல ழகர் பெருமாள் கோயில் தெப்பக் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகளிடம் கேட்டபோது, ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடப்பதால் தண்ணீர் வருவது தடைபட்டி ருக்கலாம். அதை விரைவில் சரிசெய்து தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப் படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago