வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு

By செய்திப்பிரிவு

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 84-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திருநெல் வேலி மாநகராட்சி பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ்.மகாகிருஷ்ணன், வட்டாட்சியர் பகவதிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓட்டப்பிடாரம்

வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊரான ஓட்டப்பிடாரத்தில் அவரது இல்லத்தில் உள்ள வெண்கல சிலைக்கு, அரசு சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் முத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் தலைமையிலும், திமுக சார்பில் சண்முகையா எம்எல்ஏ தலைமையிலும், அமமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளர் சிவபெருமாள் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வ.உ.சி குறித்த விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தென்காசி

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு மாவட்ட நூலக அலுவலர் இரா.வயலட் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டார நூலகர் பிரமநாயகம், நூலகர்கள் , வாசகர் வட்ட நிர்வாகிகள் கல ந்துகொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வஉசி சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சி.எஸ்.முரளிதரன், தெற்கு மாவட்ட பாஜக சார்பில் அதன் தலைவர் பி.எம்.பால்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்